கனேடியர் கொலை வழக்கு... இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியது இந்த நாடுகள்: அமெரிக்கா வெளிப்படை
கனேடியரான சீக்கியர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை Five Eyes எனப்படும் ஐந்து நாடுகள் திரட்டியதாக கனடாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதர் டேவிட் கோஹன்
கனடா மட்டும் தனியாக அந்த ஆதாரங்களை திரட்டவில்லை என குறிப்பிட்டுள்ள கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹன், இது ஒன்றிணைந்த விசாரணையின் ஒருபகுதி என்றார்.
Credit: Spencer Colby
வலுவான அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் சீக்கிய தலைவர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
கடந்த திங்களன்று நாடாளுமன்றத்தில் அரிதான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பிரதமர் ட்ரூடோ, கனேடிய உளவு அமைப்புகளிடன் உறுதியான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்கு பங்கிருப்பதாகவும் உறுதிபட தெரிவித்தார்.
இந்திய அதிகாரிகள் வகுத்த திட்டம்... கனடாவும் நட்பு நாடுகளும் திரட்டிய ஆதாரங்கள்: பூதாகரமாக வெடிக்கும் சீக்கியர் கொலை
இதன் எதிரொலியாக, இந்தியாவில் கனேடிய தூதர அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது, கனடாவுக்கான விசா சேவைகளை இந்தியா இடைநிறுத்தியது.
Five Eyes எனப்படும் பங்காளிகள்
இந்த நிலையில் தான் கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் வெளிப்படையாக, Five Eyes எனப்படும் ஐந்து பங்காளிகளால் ஆதாரங்கள் திரட்டப்பட்டது உண்மை தான் என குறிப்பிட்டுள்ளார்.
@reuter
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கனடாவுக்கு இந்த கொலை வழக்கில் உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, அமெரிக்கா இந்த விவகாரத்தில் கனடாவுக்கு தொடர்ந்து உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிப்படையாக இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டிப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல எனவும், ஆனால் தனிப்பட்ட முறையில் அனைத்து உதவிகளும் இந்த Five Eyes பங்காளிகள் முன்னெடுப்பார்கள் என்றே டேவிட் கோஹன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, சீக்கிய தலைவர் கொலையில் இந்தியாவின் பங்கு நிரூபணமானால் இது மிகவும் தீவிரமான சர்வதேச விதி மீறல் எனவும் டேவிட் கோஹன் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |