ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் ஹசரங்கா! சிக்ஸர் மழை பொழிந்த கேப்டன்
ஷார்ஜா வாரியர்ஸ் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹசரங்கா அபாரம்
இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் 13வது போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் (Sharjah Warriors) மற்றும் டெஸெர்ட் வைப்பர்ஸ் (Desert Vipers) அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் டிக்வெல்லா (5), சார்லஸ் (6) அடுத்தடுத்து லுக் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் மார்ட்டின் கப்தில் மற்றும் கோஹ்லர் கேட்மோர் கைகோர்த்தனர். கப்தில் நிதானமாக ஆடிய நிலையில், கேப்டன் கேட்மோர் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
Bow down to the ???-??????? ?#AllInForCricket #DPWorldILT20 #DVvSW pic.twitter.com/q74YUjN04r
— International League T20 (@ILT20Official) January 28, 2024
அணியின் ஸ்கோர் 146 ஆக உயர்ந்தபோது, கப்தில் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களை இலங்கையின் ஹசரங்கா ஒரே ஓவரில் வெளியேற்றினார்.
கேட்மோர் சரவெடி
இறுதியில் ஷார்ஜா அணி 174 ஓட்டங்கள் குவித்தது. கேட்மோர் 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.
டென்லி 22 ஓட்டங்களும், வோக்ஸ் 15 ஓட்டங்களும் எடுத்தனர். ஹசரங்கா மற்றும் லுக் வுட் தலா 3 விக்கெட்டுகளும், ஷாஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
@X (ILT20Official)
பின்னர் களமிறங்கிய டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அலெக்ஸ் ஹால்ஸ் மட்டும் அதிரடியில் மிரட்டினார்.
வோக்ஸ், சாம்ஸின் துல்லியமான பந்துவீச்சினால் டெஸெர்ட் அணி 167 ஓட்டங்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Hasaranga you ?????? ?
— International League T20 (@ILT20Official) January 28, 2024
3️⃣ Googlies ✅
3️⃣ Wickets ✅#AllInForCricket #DPWorldILT20 #DVvSW pic.twitter.com/8WVJIWIK0h
@X (ILT20Official)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |