அடில் ரஷீத்தின் மாயாஜாலத்தில் 94 ரன்னுக்கு சுருண்ட நரைன் அணி! தெறிக்கவிட்ட லிவிங்ஸ்டன்
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடில் ரஷீத் மாயாஜால சுழல்
Sheikh Zayed மைதானத்தில் நடந்த இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில், சுனில் நரைனின் அபுதாபி மற்றும் கேட்மோரின் ஷார்ஜா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்று ஷார்ஜா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அபுதாபி அணியில், தொடக்க வீரர் ஜோ கிளார்க் டக் அவுட் ஆனார்.
@ILT20Official
அடுத்து வந்த அலிஷான் 26 (28) ஓட்டங்களும், பெப்பர் 32 (21) ஓட்டங்களும் எடுத்து அடில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
@ILT20Official
பின்னர் சாம் ஹைனை 8 ஓட்டங்களில் ரஷீத் வெளியேற்ற, லிவிங்ஸ்டன் ஓவரில் இமாத் வாசிம் (4) அவுட் ஆனார்.
லிவிங்ஸ்டன் அதிரடி
இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, அபுதாபி 17.1 ஓவரில் 94 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அடில் 4 விக்கெட்டுகளும், டென்லி 2 விக்கெட்டுகளும், வோக்ஸ், லிவிங்ஸ்டன் மற்றும் சாம்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
95 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஷார்ஜா அணி, 13.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
திக்வெல்ல 30 (29) ஓட்டங்களும், லிவிங்ஸ்டன் 13 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்களும் விளாசினர். டென்லி ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 18 ஓட்டங்கள் எடுத்தார்.
@ILT20Official
Thumping win for the Warriors! Rashid's fantastic 4-fer and a quick-fire knock by Livingstone has given the away side a massive 7-wicket win at the Zayed Cricket Stadium! #DPWorldILT20 #AllInForCricket #ADKRvSW pic.twitter.com/2J6ABp3WnQ
— International League T20 (@ILT20Official) February 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |