அவுஸ்திரேலிய கடற்கரையில் நீச்சல் வீரருக்கு நடந்த கொடூரம்: அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
Shark Attack at Perth Beach 1 Swimmer Dead: அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறா தாக்குதல்
மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள சோரென்டோ கடற்கரையில்(Sorrento Beach) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு சுறா மீன் தாக்குதல் நடந்து இருப்பதாக அவசர கால உதவி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டது.
இந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவரின் உயிரிழந்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கடற்கரைக்கு வெறும் 50 மீட்டர் தொலைவில் நடந்த இந்த சுறா தாக்குதல் சம்பவத்தை கரையில் இருந்த பலர் நேரில் பார்த்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சுறா தாக்குதலை தொடர்ந்து சோரென்டோ கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.