ஒரே சதம்...! டிராவிட் சாதனையை முறியடித்து... ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை நெருங்கிய ரோகித்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், டிராவிட்டின் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் 127 ரன்கள் அடித்த இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் சதத்தை அடித்தார்.
இதன் மூலம், ரோகித் சர்மா இங்கிலாந்தில் சர்வதேச அளவில் அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் ஆனார்.
34 வயதான ரோகித் சர்மா, முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார். டிராவிட் இங்கிலாந்தில் 1996 மற்றும் 2012 க்கு இடையில் எட்டு சதங்கள் அடித்துள்ளார்.
தற்போது ரோகித் சர்மா இங்கிலாந்தில் ஒன்பது சர்வதேச சதங்களை அடித்துள்ளார் மற்றும் அவுஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்க இன்னும் இரண்டு சதங்கள் வித்தியாசத்திலே உள்ளார்.
டான் பிராட்மேன் இங்கிலாந்தில் சர்வதேச அளவில் 11 சதங்கள் அடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் ஒரு நாள், டி-20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் வெளிநாட்டு தொடக்க பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.