ட்ரம்ப் ஜனாதிபதியாவதால் அமெரிக்காவை விட்டே வெளியேறும் நடிகைகள் முதலான பிரபலங்கள்
ட்ரம்ப் ஜனாதிபதியாவதால் பிரபலங்கள் சிலர் அமெரிக்காவை விட்டே வெளியேற முடிவு செய்துள்ளார்கள்.
அமெரிக்காவை விட்டே வெளியேறும் பிரபலங்கள்
பேசிக் இன்ஸ்டிங்ட் முதலான பல படுகவர்ச்சியான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஷாரன் ஸ்டோன்.
Cher என்பவர், பிரபல அமெரிக்கப் பாடகியும், நடிகையும் ஆவார்.
இவர்கள் இருவருமே இத்தாலியில் சென்று குடியேற திட்டமிட்டுவருகிறார்கள்.
அவர்களைப்போலவே Raven-Symoné and Miranda Maday நடிகையர் தம்பதியும் கனடாவுக்குச் சென்று குடியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
பார்பி திரைப்படத்தில் நடித்த நடிகையரில் ஒருவரான America Ferrera என்பவரும் Minnie Driver என்னும் டார்சான் பட நடிகையும் பிரித்தானியாவில் குடியேற திட்டமிட்டுவருகிறார்கள்.
Whoopi Goldberg, Cardi B ஆகியோரும் அமெரிக்காவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், எலான் மஸ்க் ட்ரம்புக்கு தீவிர ஆதரவாளராக உள்ள நிலையில், அவரது திருநங்கை மகளான Vivian Wilsonம் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |