இந்திய மாணவ மாணவியரின் வெளிநாட்டு மோகம் குறைந்துவிட்டதா?
ஒரு காலத்தில் வெளிநாடுகளில் கல்வி கற்கும் இந்திய மாணவ மாணவியரின் எண்ணிக்கை, சீன மாணவர்களின் எண்ணிக்கையையே மிஞ்சியிருந்தது.
ஆனால், தற்போது இந்திய மாணவ மாணவியரின் வெளிநாட்டு மோகம் குறைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
வெளிநாட்டு மோகம் குறைந்துவிட்டதா?
இந்திய மாணவர்கள் கல்வி கற்க அதிகம் விரும்பிச் செல்லும் நாடுகள், கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா.
ஆனால், தற்போது இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்துள்ளன.
ஆம், நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக, 2024ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் கல்வி அனுமதி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் குறைந்துள்ளது.
கனடாவைப் பொருத்தவரை, கல்வி அனுமதி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2.78 லட்சத்திலிருந்து 1.89 லட்சமாக குறைந்துள்ளது. இது 32 சதவிகித வீழ்ச்சியாகும்.
Pradeep Kochrekar/ representative
அமெரிக்காவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 1,31,000இலிருந்து 86,110ஆக குறைந்துள்ளது. இது 34 சதவிகித வீழ்ச்சியாகும்.
பிரித்தானியாவில் கல்வி அனுமதி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,20,000இலிருந்து 88,732ஆக குறைந்துள்ளது. இது 26 சதவிகித வீழ்ச்சியாகும்.
இப்படி இந்த நாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதற்கான காரணம், அந்த நாடுகள் சமீப காலமாக புலம்பெயர்தலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள்தான்.
கனடா இந்திய மாணவர்களைக் குறிவைத்தே பல கட்டுப்பாடுகளை விதித்தது. பிரித்தானியாவும் அப்படித்தான். ஆக, ஒரு அளவு வரை பொறுத்துப் பார்த்த மாணவர்கள், வேறு நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பத் துவங்கிவிட்டார்கள்.
விளைவு, கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |