RCBக்கு எதிராக சிக்ஸர் மழை! முதல் fiftyயை பதிவு செய்த ஷாரூக் கான்
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஷாரூக் கான் தனது ஐபிஎல் அரைசதத்தினை பதிவு செய்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்கி ஆடி வருகிறது.
விருத்திமன் சஹா 5 ஓட்டங்களிலும், சுப்மன் கில் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்த ஷாரூக் கான் அதிரடியில் மிரட்டினார்.
Shahrukh bhai was at his free-flowing best en route his maiden #TATAIPL half-century! ??pic.twitter.com/NSIHguvHIa
— Gujarat Titans (@gujarat_titans) April 28, 2024
ஒருபுறம் சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஷாரூக் கான் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
இதன்மூலம் குஜராத் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மேலும் 24 பந்தில் ஷாரூக் அரைசதம் அடித்தார்.
இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். அத்துடன் டி20 போட்டிகளில் 1000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார்.
மொத்தம் 30 பந்துகளை எதிர்கொண்ட ஷாரூக் கான் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Milestone ✅
— Gujarat Titans (@gujarat_titans) April 28, 2024
To more hits and record blockbusters ?#AavaDe | #GTKarshe | #TATAIPL2024 | #GTvRCB pic.twitter.com/YupNWvQYx5
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |