IPL 2024: ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட வீரர்... பதிலடிக் கொடுத்து ஆட்டநாயகனாகிய தருணம்!
ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட ஷஷாங்க் சிங் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கை வகித்துள்ளார்.
பஞ்சாப் அணியின் வெற்றி
IPL கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 17வது ஆட்டத்தில் குஜராத் அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.
நாணயசுழட்சியை வென்று முதலில் பந்துவீச்சை பஞ்சாப் அணி தேர்வு செய்தது.
இதனை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி கில்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஷாசாங் சிங் 29 பந்துகளில் 61 ஓட்டங்களை அதிரடியாக சேர்க்க அந்த அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி தோல்வி உறுதி என ரசிகர்கள் நினைத்த வேளையில், ஆட்டத்தை மாற்றியது சிக்கந்தர் ராசாவின் ஆட்டமிழப்பு.
இதுவே சஷாங்க் சிங் ஐ கிரிக்கட் ரசிகர்கள் புகழாரம் சூட்ட காரணமாக இருந்துள்ளது.
ஆட்டநாயகனாகிய சஷாங்க் சிங்
IPL 2024 மினி ஏலத்தின் போது பஞ்சாப் அணி சஷாங்க் சிங் என்ற வீரரை எடுக்க முன்பே திட்டமிட்டு, அவரை ஏலத்தில் எடுத்தது.
ஆனால், 19 வயது சஷாங்க் சிங்கை எடுப்பதற்கு பதிலாக 32 வயதான சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்துவிட்டது.
தற்போது அந்த சஷாங்க் சிங் தான், கில்லினுடைய அதிரடிக்கு பதிலடி ஆட்டத்தை வழங்கியிருந்தார்.
தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 200 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி வெற்றியை தேடித் தந்துள்ளார்.
குஜராத் அணி தரப்பில் நூர் அஹமத் 2 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா, உமேஷ், ரஷித், மொஹித், தர்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் பெற்றுக்கொண்டனர்.
சஷாங்க் சிங் இன் உள்நுழைவை கிரிக்கட் ரசிகர்கள் விமரித்திருந்தனர். இந்த விடயம் பஞ்சாப் அணிக்கு பெரும் சவாலாக மாறியது.
ஆடுகளதிற்காக காத்திருந்த அவர், வஞ்சிக்கப்பட்ட அனைத்தையும் மாற்றியமைத்து நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக தேர்வாகினார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |