கோலி விரைவில் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகுவார்! ரவி சாஸ்திரி
டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விராட் கோலி விரைவில் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்யைில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியதை தொடர்ந்து கோலி(கேப்டன்)-ரவி சாஸ்திரியின்(தலைமை பயிற்சியாளர்) 7 வருட கூட்டணி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், விராட் கோலி விரைவில் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில், விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா உலகின் நம்பர் 1 அணியாக உள்ளது.
அதனால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பினால் தவிர அல்லது அவர் மனரீதியாக சோர்வடைந்து, அவர் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்பினால், எதிர்காலத்தில் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது நடக்கலாம், ஆனால் அது உடனடியாக நடக்கும் என்று நினைக்க வேண்டாம்.
ஒருநாள் போட்டியிலும் இதே நிலை ஏற்படலாம். டெஸ்ட் கேப்டன்சியில் மட்டும் தான் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் கூறலாம். கோலியின் மனநிலையும் உடலும் தான் அந்த முடிவை எடுக்கும்.
கிரிக்கெட்டில் பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன்சியை விட்டு கொடுத்த முதல் நபராக கோலி இருக்க மாட்டார், கடந்த காலங்களில் வெற்றிகரமாக கேப்டன்சி செய்த பல வீரர்கள், பின்னர் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக அதை விட்டுவிட்டனர் என்று ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.