பிரித்தானியாவில் மிக அதிக ஊதியம் பெற்றவர் இவர் தான்: மணிக்கு எவ்வளவு பவுண்டுகள் தெரியுமா?
பிரித்தானியாவின் Bet365 என்ற நிறுவனத்தின் தலைவரே நாட்டின் மிக அதிக ஊதியம் பெற்றவர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.
Bet365 என்ற நிறுவனத்தின் தலைவரான Denise Coates என்பவர் கடந்த ஓராண்டில் மட்டும் ஊதியமாக 469 மில்லியன் பவுண்டுகள் பெற்றுள்ளார்.
இது, ஒரு நாளுக்கு சராசரியாக 1.3 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி தமது வணிகத்தில் தனது 50 சதவிகித பங்குகளுக்காக அவருக்கு மற்றொரு 48 மில்லியன் பவுண்டுகள் ஈவுத்தொகையும் கிடைத்துள்ளது.
அதாவது 150,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் பிரதமர் போரிஸ் ஜோன்சனை விட டெனிஸ் கோட்ஸ் 3,126 மடங்கு அதிகமாக ஊதியம் பெறுகிறார்.
டெனிஸ் கோட்ஸ் ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட, 54,000 பவுண்டுகளை ஊதியமாக பெறுகிறார்.
இது பிரித்தானியாவின் 100 பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் சம்பளங்கள் அனைத்தையும் விட அதிகமாகும்.
Bet365 நிறுவனமானது தங்களின் மூத்த மேலாளர்கள் அனைவருக்குமான ஊதியமாக கடந்த ஆண்டு மொத்தம் 607 மில்லியன் பவுண்டுகள் கையளித்துள்ளது.
கோட்ஸ் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6.8 பில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவின் 5வது மிகப் பெரிய பணக்கார பெண்மணியாக திகழ்கிறார் டெனிஸ் கோட்ஸ்.
