எங்களில் ஒருவர் நீங்கள்... மேகனுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து கிடைத்த ரகசிய குறியீடு
பிரித்தானிய அரச குடும்பத்து மூத்த உறுப்பினர்கள் மேகன் மெர்க்கலை நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், உண்மை பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் தொடர்பில் புத்தகம் ஒன்று வெளியாகவிருக்கிறது. அதன் ஆசிரியரான ஆண்ட்ரூ மோர்டன் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில்,
பிரித்தானிய அரச குடும்பத்தில் மேகன் மெர்க்கல் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த காலகட்டத்தில், இளவரசர் சார்லசின் மனைவி கமிலா பார்க்கர் பவுல்ஸ் தொடர்ந்து மேகனுடன் நெருக்கமாக முயற்சித்து வந்ததாகவும், ரகசிய குறியீடுகளால் அவர் அதை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேகன் மீது அரச குடும்பத்து மூத்த உறுப்பினர்கள் காட்டிய பரிவும் அக்கறையும் அவர் தவறாக புரிந்து கொண்டதாகவே கூறப்படுகிறது. இளவரசர் சார்லசின் 70ம் பிறந்தநாளில் கமிலா பார்க்கர் மிகவும் பரிவாக மேகனின் கைகளைப்பற்றி உரையாடியதும், விழாவின் இறுதியில் மேகனுக்கு முத்தமிட்டு வழுயனுப்பி வைத்ததும் அவரை தங்களில் ஒருவராக கமிலா ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அமெரிக்க நடிகையாக பணியாற்றிய ஒருவரை மிக விரைவில் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது அரிதான விடயம் என்கிறார் ஆண்ட்ரூ மோர்டன்.
சார்லசின் பிறந்தநாள் விழாவில், மேகன் மெர்க்கல் தங்களில் ஒருவர் என கமிலா பார்க்கர் தமது உடல் மொழி மற்றும் குறியீடுகளால் உலகுக்கு வெளிப்படுத்தியதாக ஆண்ட்ரூ மோர்டன் குறிப்பிடுகிறார்.