ஷபாலி வர்மா உலக சாதனை; ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடரை வென்ற இந்திய மகளிர் படை
india womens won t20 series vs zimbabwe: ஷபாலி வர்மாவின் சாதனை அரைசதத்துடன், ஜிம்பாப்வேவிற்கு எதிரான T20 தொடரை இந்திய மகளிர் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
T20 தொடரை வென்ற இந்திய மகளிர் படை
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ராய்பூரில் நேற்று நடைபெற்ற 3வது T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய மகளிர் முதலில் துடுப்பாட்டதை தேர்வு செய்தது.
ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஷபாலி வர்மாவின் அதிரடி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது.

ஷபாலி வர்மா 37 பந்துகளில் 69 ஓட்டங்களும், ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 91 ஓட்டங்களும் குவித்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில், Beloved Biza 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக ஷர்னே மேயர்ஸ் 60 ஓட்டங்களும், பிலவட் பிஸா 40 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்தியா தரப்பில், நந்தனி ஷர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் மூலம், இந்திய மகளிர் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே 2 T20 போட்டிகளையும் இந்திய மகளிர் அணி வென்றிருந்த நிலையில், தற்போது 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.
ஷபாலி வர்மா சாதனை
இந்த போட்டியில் அரைசதம் விளாசிய ஷபாலி வர்மா, 2026 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில், ஸ்மிருதி மந்தனா 8 அரைசதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை 27 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷபாலி வர்மா, ஒரு சதமும் 9 அரைசதங்களும் விளாசியுள்ளார்.