பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்... ஐந்து இளம் வயதினர் கைது
பிரித்தானியாவில் மிகவும் அமைதியாக காணப்படும் பகுதி ஒன்றில், ஐந்து சிறார்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து இளம் வயதினர்
பட்டப்பகலில் நடந்த சம்பவத்தில் ஐந்து இளம் வயதினர் கைதாகியுள்ளனர். ஷெஃபீல்ட் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் 11 வயது சிறுவன், 13 மற்றும் 15 வயதுடைய இருவர் காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.
நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில், ஒரு சிறுவனின் தலையிலும், ஒருவரின் முதுகிலும், ஒருவரின் கையிலும், கழுத்திலும் துப்பாக்கியால் சுடப்பட்டது என்றார். ஜன்னல் வழியாக சிறார்களை வேண்டுமென்றே துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 2.23 மணியளவில் தகவல் அறிந்து அவசர மருத்துவ உதவிக் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். இதில் நான்கு சிறுவர்கள், 7 வயது சிறுமி ஒருவர் மற்றும் 62 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
ஐந்து இளைஞர்கள்
Air rifle துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது பின்னர் தெரிய வந்தது. மூன்று சிறார்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு குண்டுகளை நீக்கியுள்ளனர். இந்த வழக்கில் தற்போது ஐந்து இளைஞர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 15 வயது சிறுமி ஒருவர், 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் மற்றும் 18 வயதுடைய நபர் என கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என தெற்கு யார்க்ஷயர் பொலிசார் தெரிவித்துள்ளனர். Richmond Park Avenue பகுதியிலேயே தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |