வேலை இழந்த தந்தை! துரத்திய குடும்ப வறுமை... தடைகளை கடந்து சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்
டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதிலும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த அணியின் துணை கேப்டன் ஷேக் ரஷீத் பல்வேறு தடைகளை தாண்டி சாதித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
U 19 உலக கோப்பையின் இறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் துணை கேப்டன் ஷேக் ரஷீத் சிறப்பாக விளையாடினார்.
முக்கியமாக அவுஸ்திரேலியா உடனான அரையுறுதியில் அவர் எடுத்த 94 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தது. இறுதி போட்டியிலும், இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து வெளியேற, நிதானமாக ஆடிய ஷேக் ரஷீத், 50 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
பிற்காலத்தில் இந்திய சர்வதேச சீனியர் அணியின் தூணாக ரஷீத் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்வில் பல்வேறு சிரமங்களை தாண்டியே அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் பாலிஷா என்பவரின் மகன் தான் ஷேக் ரஷீத். குண்டூர் பகுதியில் இருந்து, சுமார் 50 கி.மீ தொலைவில் இருக்கும், மங்களகிரி கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் தனது மகனை அழைத்துக் கொண்டு பயணம் செய்துள்ளார் பாலிஷா.
குண்டூர் பகுதிக்கு அருகே எந்த கிரிக்கெட் பயிற்சி மையமும் இல்லாததால் இதை செய்திருக்கிறார். இதன் காரணமாக பாலிஷா வேலைக்கு செல்வதில் தினமும் தாமதம் ஆனது.
இதனால் வேலையை இழந்தார். குடும்ப வறுமை சூழல், வேலையின்மை என எந்த நிலை ஏற்பட்டாலும், மகனின் கிரிக்கெட் கனவுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தார் பாலிஷா.
ஷேக் ரஷீத்தின் குடும்ப சூழ்நிலையைக் கண்ட பயிற்சியாளர், அவருக்கு உதவ முன் வந்துள்ளார். அதன்படி, ஷேவாக் ரஷீத்தின் முழு செலவையும், அவர் ஏற்றுக் கொண்ட நிலையில், அதன் பின், ஷேவாக் ரஷீத் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்துள்ளது.
இதன்பின்னர் U 19 உலக கோப்பை இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்த நிலையில் தன்னை நிரூபித்துள்ளார்.