சிக்ஸர் மழைபொழிந்து கடைசி ஓவரில் 32 ரன் விளாசிய வீரர்! வைரலான வீடியோ
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஷெப்பர்ட், ஒரே ஓவரில் 32 ஓட்டங்கள் விளாசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்தது. அந்த அணி 5 விக்கெட்டுக்கு 234 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோமரியோ ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ஓட்டங்கள் எடுத்தார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அவர், அடுத்து ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார்.
? ? ? - ? ? ? ? ?#MumbaiMeriJaan #MumbaiIndians #MIvDC #ESADay #EducationAndSportsForAllpic.twitter.com/IaVPjFsUoa
— Mumbai Indians (@mipaltan) April 7, 2024
ஐந்தாவது பந்தை பவுண்டரியாக செல்ல, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 10 பந்தில் 39 ஓட்டங்கள் குவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷாமர் ஜோசப் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
From one West Indian to the other ??
— IndianPremierLeague (@IPL) April 8, 2024
Hey Romario Shepherd, you have a special message from Shamar Joseph ?#TATAIPL | #LSGvGT | #MIvDC | @LucknowIPL | @mipaltan | @SJoseph70Guyana pic.twitter.com/mABPmrWUAn
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |