டி20 உலகக்கோப்பையை அவுஸ்திரேலியா வெல்ல காரணமாக இருந்த வீரர் ஐபிஎல்லில் எந்த அணியில் ஆடுவார்? சேவாக் சொன்ன தகவல்
ஐபிஎல் 15வது சீசன் ஏலத்தில் டேவிட் வார்னரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்த தகவலை வீரேந்திர சேவாக் கசிய விட்டுள்ளார்.
ஐபிஎல் 14ஆவது சீசனிம் முதல் பாதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது. தொடர் தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியில் இருந்த அணி நிர்வாகம் கேப்டன் டேவிட் வார்னரை பதவியிலிருந்து நீக்கியது.
இந்நிலையில் நீக்கப்பட்ட வார்னர், அணியிலிருந்தும் ஓரம்கட்டப்பட்டார். ஏனெனில் தொடர்ந்து மோசமாக விளையாடிய வார்னர் பார்மை இழந்து தவித்தார். ஆனால் சமீபத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் மிரட்டிய வார்னர் ரன்களை குவித்து அவுஸ்திரேலிய அணி கோப்பையை தட்டி தூக்க காரணமாக காரணமாக இருந்தார். இதனால், இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் காரணமாக 15வது ஐபிஎல் ஏலத்தில் வார்னரை வளைத்து போட பல அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இது குறித்து பேட்டியளித்த ஜாம்பவான் சேவாக், மெகா ஏலத்திற்கு முன்பு, புதிய இரண்டு அணிகள் மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய அணிகளில் ஒன்று, தொடக்க வீரர் மற்றும் கேப்டன் என்ற முறையில் டேவிட் வார்னரை தக்கவைக்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.