டோனியும் நானும் இல்லேன்னா கோலியை அணியில் இருந்து தூக்கியிருப்பாங்க! ரகசியம் உடைத்த சேவாக்
தானும் டோனியும் ஆதரவளிக்கவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி எப்போதோ நீக்கப்பட்டு இருப்பார் என ஜாம்பவான் சேவாக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் வீரேந்திர சேவாக் அளித்த பேட்டியில், கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது டவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் வெறும் 76 ரன்கள் மட்டுமே குவித்தார்.
அதன்பிறகு அவுஸ்திரேலிய தொடரின் போதும் மிகவும் தடுமாறினார். இதன் காரணமாக அந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு கோலியை அணியில் எடுக்கலாமா ? வேண்டாமா ? என்ற குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் இருந்தது.
மேலும் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மாவை அணியில் களமிறக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் அப்போது கேப்டனாக இருந்த டோனியும், துணை கேப்டனாக இருந்த நானும் கோலியை நீக்கக்கூடாது என்று ஆதரவளித்தோம்.
2012ஆம் ஆண்டு பெர்த் டெஸ்ட்க்கு முன்பாக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று இருந்த வேளையில் நானும் டோனியும் அவருக்கு ஆதரவு தந்தோம்.
அதன் பிறகு கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது வரலாற்றை படைத்தார் என்பது நாம் அறிந்ததே என கூறியுள்ளார்.