கைதுக்கு பயந்த கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி! செக் மோசடி வழக்கில் நடந்தது? வெளியான உண்மை
செக் மோசடி வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவியின் மனுவை நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.
வீரேந்திர சேவாக்கின் மனைவி, ஆர்த்தி சேவாக். இவரின் மீது ரூ.2.5 கோடி மதிப்பிலான செக் மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. இந்த வழக்கு தற்போது உத்தரப்பிரதேச மாநிலம், கவுதம் புத் நகரிலுள்ள நொய்டா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பழப் பொருட்களைத் தயாரித்து விற்று வரும் நிறுவனம் எஸ்.எம்.ஜி.கே. இந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார் ஆர்த்தி. லக்கன்பால் புரமோட்டர்ஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து எஸ்.எம்.ஜி.கே நிறுவனம் ஆர்டரை எடுத்துள்ளது.
இதற்காக வழங்கப்பட்ட செக்கை வங்கியில் கொடுத்த போது பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தோடு தொடர்புடைய ஆர்த்தி சேவாக் மீது செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது. இந்த விசாரணை நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ள ஆர்த்தியின் நடவடிக்கையை கண்டித்து நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட்டை பிறப்பித்தது.
இந்நிலையில் கைதுக்கு அஞ்சி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகிய ஆர்த்தி, ஜாமீன் கோரி மனுவை தாக்கல் செய்தார், மேலும் நீதிமன்றத்தின் வாரண்டைத் திரும்ப பெறும்படியும் விண்ணப்பித்தார்.
இதையடுத்து அவரது மனு நீதிமன்றத்தால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.