11-வது மிகப்பெரிய கிரிப்டோ நாணயமாக மாறிய Shiba Inu - ஒரே நாளில் புதிய உச்சத்தை எட்டி சாதனை!
ஷிபா இனு (Shiba Inu) வார இறுதியில், மார்க்கெட் மதிப்பின் அடிப்படையில் 11-வது பெரிய கிரிப்டோகரன்சியாக உயர்ந்து சாதனை படைத்தது.
தற்போதையை கிரிப்டோகரன்சியாக சந்தையில் SHIB என்று அறியப்படும் Shiba Inu கிரிப்டோ நாணயம் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்த ஆண்டு இந்த நாணயத்தின் மதிப்பு பல ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நாணயத்திற்கு Tesla மற்றும் SpaceX நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் (Elon Musk) தரும் ஆதரவு மிக முக்கிய காரணம் என்று நம்பப்படுகிறது.
CoinGecko.com தரவுகளின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நேரப்படி காலை 10:10 மணி முதல் 24 மணிநேரத்தில் இந்த Shiba Inu-வின் மதிப்பு 50% அதிகரித்துள்ளது.
Shiba Inu நேற்று ஒரே நாளில் 'All Time High' என்று சொல்லப்படும் அளவிற்கு இந்த ரூபாயின் மதிப்பில் ₹0.00332359 வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.
Picture: Screenshot from coingecko.com
அதேபோல், இதுபோன்ற கிரிப்டோ நாணயங்களில் முன்னிலையில் இருக்கும் மிகப்பெரிய நாணயங்களின் பட்டியலில், Shiba Inu தற்போது 11-வது இடத்தை பிடித்துள்ளது. ஒரு மீம் நாணயம் இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது மிகப்பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது.
SHIB நாணயத்தை ராபின்ஹுட் -ஐ சேஞ்ச்.ஓஆர்ஜி-யின் தளத்தில் பட்டியலிட ஒரு மனு கிட்டத்தட்ட 300,000 கையொப்பங்களைப் பெற்றுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் மீம் டோக்கனான Shiba Inu 40 மில்லியனுக்கும் அதிகமான சதவீதம் உயர்வை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலான சிறு முதலீட்டாளர்கள் இந்த நாணயத்தை வாங்கி வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.