Shikaikai Shampoo! பொலிவான கூந்தலுக்கு சிகைக்காயுடன் இதை சேர்க்க மறக்காதீங்க
தலைமுடி மற்றும் சரும பராமரிப்புக்கு செயற்கையான பொருட்களை நாடுவதை விட இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதே பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும்.
அந்த காலத்தில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகைக்காயே அதிகம் பயன்படுத்தி வந்தனர்.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி வைட்டமின் டி, வைட்டமின் ஈ போன்றவை இருப்பதால், தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.
இந்த பதிவில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உபயோகப்படுத்த வேண்டிய பொருட்கள் பற்றி பார்க்கலாம்.
தேவையானவை
சிகைக்காய் பொடி- 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 1 டீஸ்பூன்
தேன்- 2 டீஸ்பூன்
சுடுநீர்- 1 கப்
செய்முறை
சுத்தமான பாத்திரம் ஒன்றில் நீரை ஊற்றி கொதிக்க விடவேண்டும், கொதிநிலையை அடைந்தவுடன் ஆலிவ் ஆயில், சிகைக்காய் பொடி சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு கொதிக்கவிட வேண்டும்.
சூடு ஆறியதும் இளம்சூட்டில் வடிகட்டி எடுத்து, தேன் கலக்கவும், இதனை தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு அலசவும்.
ஷாம்பு தேய்த்த பின்னர் இதனை பயன்படுத்தலாம் அல்லது ஷாம்புவுக்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்.
தலை முடி சுருள் சுருளாகவோ, வறண்டு இருந்தாலோ இதை நேரடியாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.