ஷிகார் தவான் பவுலிங்கை பார்த்திருக்கிறீர்களா? ஐபிஎல்லில் அவர் எடுத்த விக்கெட்டுகள்: வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகார் தவான் ஐபிஎல் தொடரில் எடுத்த விக்கெட்டுகளின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலக கிரிக்கெட் அரங்கில் சில பேட்ஸ்மேன் பந்து வீசுவது மிகவும் அரிதான விஷமாக பார்க்கப்படும். அந்த வீரர்களின் வரிசையில் இருப்பவர் தான் ஷிகார் தவான்.
இவர் பேட்டிங், பீல்டிங்கில் கேட்சைப் பிடித்தால், தொடையை தட்டுவது என்று பிரபலமாக இருந்தாலும், இவரும் சில போட்டிகளில் பவுலிங் செய்துள்ளார்.
குறிப்பாக ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில், அதாவது 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் இவர் தான் விளையாடிய அணிக்காக பவுலிங் செய்துள்ளார். 2011-ஆம் ஆண்டு 2 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும், 2012-ஆம் ஆண்டு 6 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டையும் இவர் வீழ்த்தியுள்ளார்.
புனே அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஷிகர் தவன் கங்குலியின் விக்கெட்டையும், அதே போன்று பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷான் மார்ஷ் விக்கெட்டையும், அதிரடி ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் சேவாக்கின் விக்கெட்டையும் ஷிகார் தாவான் ஐபிஎல் தொடரில் வீழ்த்தியுள்ளார்.
இதில் பஞ்சாப் அணிக்காக மட்டுமே விளையாடிய மார்ஷ் முதல் சீசனில் ஆரஞ்சு தொப்பையையும் கைப்பற்றி அசத்திய போது, அவரை தன்னுடைய அசத்தலான பந்து வீச்சின் மூலம் ஷிகார் அவுட் ஆக்கினார். அதன் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.