40 வயதில் அயர்லாந்து காதலியுடன் இரண்டாவது திருமணம்: ஷிகர் தவானுக்கு குவியும் வாழ்த்துக்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது அயர்லாந்து காதலி சோஃபி ஷைனை கரம் பிடித்தார்.
ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக விளையாடி புகழ்பெற்றவர் ஷிகர் தவான்(Shikhar Dhawan).
ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரன் குவிக்கக்கூடிய இவர், கடந்த 2023ஆம் ஆண்டில் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை பிரிந்தார்.
அதன் பின்னர் அயர்லாந்தைச் சேர்ந்த சோஃபி ஷைன் என்ற பெண்ணை தவான் ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்தித்தார்.

நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்க ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இரண்டாவது திருமணம்
இந்த நிலையில் 40 வயதாகும் ஷிகர் தவன் நேற்றைய தினம் தனது காதலியை கரம் பிடித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தவான் பதிவிட்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படத்தை சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தி இருக்கிறார். அதேபோல் ரசிகர்கள் பலரும் தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஐபிஎல்-யில் டெல்லி, ஐதராபாத், மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி வந்த ஷிகர் தவான், கடந்த சீசனுக்கு முன் ஓய்வை அறிவித்தார்.
பின் அவர் தனது தொழில் மற்றும் வர்ணனை பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |