என் கணவர் தயாரித்தது ஆபாச படமில்லை!!! விசாரணையில் ஷில்பா ஷெட்டி சொன்னது என்ன?
ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், இந்நிலையில் நேற்று சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் ஆபாச படங்கள் தயாரித்தது தொடர்பாக தனக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை, என் கணவர் தயாரித்தது Porn படங்கள் அல்ல, அது Erotic, இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த App தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதிலிருந்து எந்தவொரு லாபமும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் வெளியாகும் படங்களிலும் ஆபாசம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை பதிவு செய்துகொண்ட போலீசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.