சிம்லாவில் உணவகத்தில் பயங்கர வெடிப்பு விபத்து: ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்
சிம்லாவின் மால் சாலையில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் ஒருவர் பலி, 7 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
உணவகத்தில் வெடி விபத்து
சிம்லாவின் மையத்தில் உள்ள மால் சாலையின் மிடில் பஜார் பகுதியில் உள்ள ஹிமாச்சலி ரசோய் என்ற உணவு உண்ணும் இடத்தில் நேற்று மாலை திடீரென வெடிப்பு விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிப்பு விபத்தில் அருகில் இருந்த 4 முதல் 6 கடைகள் பலத்த சேதமடைந்துள்ளன, அத்துடன் அருகில் சுற்றுவட்டாரத்தில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.
One killed, 7 injured in a gas cylinder blast at eatery on Shimla's Mall Road, several shops damaged: Officials pic.twitter.com/RqrQ7ECWPR
— JAMMU LINKS NEWS (@JAMMULINKS) July 18, 2023
மேலும் வெடிப்பு விபத்து ஏற்பட்ட போது ஏற்பட்ட சத்தம் பல மைல்களுக்கு கேட்டதாக தெரிவிக்கப்பட்டது, நல்லவேளையாக வெடிப்பு விபத்து ஏற்பட்ட பகுதியின் அருகில் தீயணைப்பு நிலையம் இருந்ததால் மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் வரை பலத்த காயமடைந்துள்ளனர்.
வெடிப்பு விபத்துக்கான காரணம்
இந்த திடீர் குண்டு வெடிப்பு, உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏனென்றால், விபத்துக்கு 20 நிமிடத்திற்கு நேரத்திற்கு முன்பு தான், எரிவாயு கசிவு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வெடிப்பு விபத்துக்கான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |