ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர்
shiv nadar tops in india philanthropy list: 2026 ஆம் ஆண்டில் அதிக நன்கொடை வழங்கிய இந்தியர்களின் பட்டியலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் ரூ.2,593 கோடி நன்கொடை வழங்கி முதலிடம் பிடித்துள்ளார்.
ஷிவ் நாடார் முதலிடம்
2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை Hurun india வெளியிட்டுள்ளது.
இதில், தொடர்ந்து 5வது ஆண்டாக HCL நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார்.

ஷிவ் நாடார், 2025 - 2026 நிதியாண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். அதாவது சாரிசாரியாக நாளொன்றுக்கு ரூ.7.1 கோடி வழங்கியுள்ளார். ஷிவ் நாடார் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.
கடந்த ஆண்டு ரூ.491 கோடி நன்கொடை வழங்கியிருந்த கௌதம் அதானி, இந்த ஆண்டில் ரூ.877 கோடி வழங்கி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பஜாஜ் குடும்பம் ரூ.632 கோடியுடன் 3வது இடத்திலும், முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.620 கோடிகளுடன் 4வது இடத்திலும், நந்தன் நிலேகனி ரூ. 380 கோடியுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
ரூ.215 கோடி நன்கொடை வழங்கி அதிக நன்கொடை வழங்கிய பெண்கள் பட்டியலில், 67 வயதான ரோகிணி நிலேகனி முதலிடம் பிடித்துள்ளார். பெண் கொடையாளிகளின் எண்ணிக்கை 24 லிருந்து 29ஆக அதிகரித்துள்ளது.

ரூ.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர் நன்கொடைகளின்படி, 219 நன்கொடையாளர்கள், ரூ.11,554 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட ரூ.10,380 கோடியை விட 11% அதிகமாகும்.
இந்தப் பட்டியலில் உள்ள கொடையாளர்களின் எண்ணிக்கை 192 லிருந்து 219 ஆக உயர்ந்துள்ளது. இதில், 19 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளனர். அதே நேரத்தில் புதியவர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 45 ஆக அதிகரித்துள்ளது.
கொடையாளர்களின் எண்ணிக்கையில், மும்பை 64 பேருடன் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. நன்கொடை மதிப்பின் அடிப்படையில் டெல்லி ரூ.3,168 கோடியுடன் முதலிடம் பிடித்தது.
அதிகபட்சமாக கல்வித்துறைக்கு ரூ. 4,188 கோடி கிடைத்துள்ளது, இது மொத்த நன்கொடைகளில் 36% ஆகும்.