பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோவில்!..மர்மம் நிறைந்தவை
இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும்.
அப்படி நம்மால் நம்பவே முடியாத புராண கதையை கொண்ட ஒரு கோவில் குறித்துதான் பார்க்க போகிறோம். இந்த கோவில் ஒரே இரவில் பேய்களால் சிவனுக்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது இந்த கக்கன்மாத் கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பலர் கூறுகின்றனர். அதுவும் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் புனிதம் என்பதை விட, மர்மமான கோவில் என்று தான் உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது.
பொதுவாக கோவில் என்றால் கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி சாந்து பூசி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கோவில் சுண்ணாம்பு, சிமெண்ட் மற்றும் கலவை எதுவும் இல்லாமல், வெறும் கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதுவும் பலருக்கு மர்மமாக தோன்றுகிறது.
புராணகதைகளின் படி, இக்கோவில் கட்டுவதற்கு சிவபெருமான் பேய்களுக்கு ஆணையிட்டாராம். அதுவும் அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்று கூறினாராம்.
கோவில் கட்டுமானம் முடிவதற்குள் விடிந்ததால் அப்படியே விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சிலர் கக்கன்மாத் கோவில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அந்த சமயத்தில் கச்வாஹா வம்சத்தின் கிர்த்தி மன்னன் தனது மனைவிக்காக கட்டப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.
மேலும் அவர் ஒரு சிவபெருமானின் பக்தர் என்றும் சுற்றி ஒரு சிவன் கோயில் கூட இல்லாததால், அவர் அதைக் கட்டினார் என்றும் பலர் நம்புகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |