இந்திய அணிக்குள் கோலிக்கு எதிராக.. ஆதரவாக என இரு முகாம்கள் இருக்கிறது! பரபரப்பை கிளப்பிய சோயிப் அக்தர்
இந்திய அணிக்குள் கோலிக்கு எதிராக ஆதரவாக என இரு முகாம்கள் இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
சோயிப் அக்தர் கூறியதாவது, இந்திய அணிக்குள் கோலிக்கு எதிராக மற்றும் ஆதரவாக என இரு முகாம்கள் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை.
இது கோலி கடைசியாக கேப்டனாக இருக்கும் டி20 உலகக் கோப்பை என்பதால் இருக்கலாம்.
அணிக்குள் இருக்கும் பிளவுதான் களத்தில் வீரர்களின் செயல்பாட்டிற்கு வழிவகுத்தது.
ஒருவேளை கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் கோலி தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம், அது உண்மைதான். ஆனால் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், அவரை நாம் மதிக்க வேண்டும்.
நியூசிலாந்துக்கு எதிராக அவர்கள் மோசமான கிரிக்கெட்டை விளையாடியதாலும், தவறான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாலும் விமர்சனம் முக்கியமானது.
நேற்று டாஸ் இழந்த பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் தலை குனிந்து காணப்பட்டனர்.
அவர்கள் டாஸை மட்டும் தான் இழுந்தார்கள், போட்டியில் இல்லை. அவர்களிடம் நியூசிலாந்துக்கு எதிரான எந்தவித திட்டமும் இல்லை என அக்தர் கூறினார்.