ரோகித் ஏன் 3வது இறங்கினார்? நியூசிலாந்திடம் தோற்ற இந்தியாவை கடுமையாக விமர்சித்த சோயிப் அக்தர்
நியூசிலாந்து உடனான தோல்விக்குப் பின் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த சூப்பர 12 போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
தோல்விக்கு பின் தனது யூடியூப் சேனிலில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் கேம்ப்ளான் தொடர்பில் சரமாரி கோள்வி எழுப்பியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கட்டாய வெற்றிப்பெற வேண்டிய போட்டியில் இந்தியாவின் பிளேயிங் லெவனை மாற்றியமைக்கப்பட்டதை அக்தர் சாடினார்.
அவர்கள் எந்த மனநிலையில் மனப்பான்மையில் விளையாடினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ரோகித் ஏன் 3வது இறங்கினார், ஏன் இஷான் கிஷான் ஒபனிங் பேட்ஸ்மேனாக இறக்கப்பட்டார்?
ஹர்திக் பாண்டியா, இன்னிங்ஸில் மிகவும் தாமதமாக பந்துவீசினார், முன்னதாகவே பந்துவீசியிருக்க வேண்டும்.
இந்தியாவின் கேம்ப்ளான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது முற்றிலும் நம்பிக்கை இழந்த இந்திய அணி என அக்தர் விமர்சித்தார்.
இந்திய ஊடகங்களின் அனைத்து விளம்பரங்கள் மற்றும் அழுத்தங்களுக்குப் பிறகு, அணி போராடும் என்று எனக்குத் தெரியும்.
மீண்டும், அணி பலவீனமான பந்துவீச்சு அணியாக மாறி இருப்பதை நிரூபித்துள்ளது என அக்தர் கூறினார்.