இந்திய அணியை பழிவாங்க இதுதான் ஒரே வழி! பாகிஸ்தானின் முன்னாள் புயல்வேக பந்துவீச்சாளர்
பாகிஸ்தானில் வந்து விளையாட மாட்டோம் என கூறும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பதிலடி கொடுப்பதற்கான வழி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தொடர்
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 2025யில் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. பாகிஸ்தானில் நடைபெற உள்ள தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆனால் இந்திய அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு விளையாடாது என பிசிசிஐ தெரிவித்தது.
இந்தியா வந்து விளையாடினால் வருமானம் அதிகரிக்கும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளையாடும்படி கேட்டுக் கொண்டது. எனினும் இந்திய அணி தொடர்ந்து மறுத்து வருவதால் குழப்பமான சூழல் நிலவுகிறது.
சோயப் அக்தர் யோசனை
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் (Shoaib Akhtar) புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஒரு தொடரை நடத்தும்போது நீங்கள் வருமானத்தைப் பெறுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். எனவே பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு நியாயமானது. அவர்கள் தங்களுடைய நிலையில் வலுவாக இருக்க வேண்டும்.
இந்தியா வர விரும்பவில்லை என்றால், அவர்கள் வருவாயை எங்களுடன் அதிக விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு நல்ல யோசனை.
அதே சமயம் இந்தியாவில் நாம் வருங்காலங்களில் நட்புடன் விளையாட வேண்டும். என்னுடைய நம்பிக்கை எப்போதும் என்ன என்றால், இந்தியாவுக்கு நாம் சென்று அவர்களை வீழ்த்த வேண்டும்.
இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும். சாம்பியன்ஸ் தொடர் ஹைபிரிட் மோதலில் நடைபெறுவது ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |