அவர் பார்க்கும்போதே பந்துவீசியது என் அதிர்ஷ்டம்! மறைந்த ஜாம்பவான் வார்னே குறித்து அறிமுக வீரர் உருக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாக உள்ள சோயப் பஷீர், மறைந்த ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே குறித்து உருக்கத்துடன் பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணி
2024 ஜனவரியில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று வீரர்கள் அறிமுகமாகின்றனர். அவர்களில் சோயப் பஷீரும் ஒருவர். 20 வயதாகும் இவர் இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இவர் மறைந்த அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவை (Shane Warne) குறிப்பிட்டு உருக்கத்துடன் பேசியுள்ளார்.
ஷேன் வார்னே
அவர் கூறுகையில், 'UK ராயல்ஸ் அகாடமியில் எனது பயிற்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று, சிறந்த ஷேன் வார்னேவை சந்தித்துப் பேசியது தான். அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில பந்துகளை வீசும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, மேலும் அவர் எனக்கு சில மதிப்புமிக்க குறிப்புகளைக் கொடுத்தார்' என தெரிவித்துள்ளார்.
"One of my highlights of training at the Royals Academy UK was meeting and talking to the great Shane Warne. I was lucky enough to bowl a few balls while he was watching and he gave me a few valuable tips!” - Shoaib Bashir, England's latest Test recruit ? pic.twitter.com/GaqI7sbevj
— Rajasthan Royals (@rajasthanroyals) December 11, 2023
ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 2022ஆம் ஆண்டில் தனது 52வது வயதில் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Photosport
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |