மிகவும் மோசமாக ரன் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்! கொண்டாடிய வங்கதேச வீரர்கள் வீடியோ
வங்கதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி வீரரான சோயிப் மாலிக் மிகவும் மோசமாக ரன் அவுட் ஆகி வெளியேறும் காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலில் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் படி நேற்று இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி, வங்கதேச அணி நிர்ணயித்த 127 ஓட்டங்களை, 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரரான சோயிப் மாலிக், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய ஓவரை எதிர் கொண்டார்.
Shoaib Malik?pic.twitter.com/MIGoTLXAEn
— CricTracker (@Cricketracker) November 19, 2021
அப்போது அவர் அந்த பந்தை ஆப் திசையில் அடித்து விட்டு ஓட முயற்சித்த போது, பந்தானது விக்கெட் கீப்பர் Nurul Hasan-யிடம் செல்ல, அவர் மாலிக் மிகவும் அசால்ட்டாக இருப்பதை அறிந்து உடனடியாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார்.
பந்தானது ஸ்டம்பில் பட உடனே வங்கதேச அணியால் ரன் அவுட் கேட்கப்பட்டது. அதில் மாலிக் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் மாலிக் இதை நம்ப முடியாத வகையில், மிகவும் மோசமாக ரன் அவுட் ஆனதை நினைத்து புலம்பியபடி வெளியேறினார்.