மரணப்படுக்கையிலிருந்த தாயை காண்பதற்காக துபாயிலிருந்து பிரித்தானியா வந்த பெண்: காத்திருந்த அதிர்ச்சிகளும் ஏமாற்றமும்
நான்கு ஆண்டுகளாக துபாயில் வாழ்ந்துவரும் பிரித்தானிய பெண் ஒருவர் தன் தாய் மரணப்படுக்கையில் இருப்பதை அறிந்து, அவசர அவசரமாக பிரித்தானியா திரும்பினார்.
Mary Garvey (35) என்ற அந்த பெண் விமான நிலையம் வந்து இறங்கி தன் மொபைலை ஆன் செய்தபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், மரணப்படுக்கையிலிருந்த அவரது தாயார் சில மணி நேரத்துக்கு முன் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி அவருக்கு வந்திருந்தது.
தாயை எப்படியாவது கடைசியாக ஒரு முறை பார்த்துவிடலாம் என்ற ஆசையுடன் வந்த Mary, விமான நிலையத்திலேயே கதற, எல்லை அதிகாரிகள் அவரைத் தேற்றியிருக்கிறார்கள்.
தாயின் உடலைக் காண வீட்டுக்கு புறப்பட்ட Maryக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அவர் துபாயிலிருந்து வந்ததால், துபாய் பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் இருப்பதால், அவர் 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
தாயை உயிருடனும் பார்க்கமுடியாமல், தாயின் உடலையும் பார்க்க முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது Maryக்கு.
அந்த தனிமைப்படுத்தல் விதியின்படி, Mary, ஏப்ரல் 12ஆம் திகதி, நேரடியாக தன் தாயின் இறுதிச்சடங்குக்கு மட்டுமே செல்ல முடியும்.
ஆக, கடைசி வரை அவரால் அவரது தாயின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாது. ஜூம் வாயிலாக தாயின் இறுதிச்சடங்கை ஒழுங்கு செய்ய தன் தந்தைக்கு உதவிக்கொண்டிருக்கிறார் Mary.
இன்னொரு கஷ்டம் என்னவென்றால், தாயின் இறுதிச்சடங்கு அன்று, Maryயின் வயதுமுதிர்ந்த தந்தைதான், பல மைல் தூரம் கார் ஓட்டிவந்து Maryயை இறுதிச்சடங்குக்கு அழைத்துச் செல்ல வேண்டும்..
அவர் மனைவியின் இறுதிச்சடங்கின்போது வீட்டில் இருப்பாரா அல்லது மகளை அழைத்துவருவதற்காக ஓடுவாரா? கடும் கோபம் அடைந்துள்ள Mary, நான் பிரித்தானியா மீது கடும் கோபத்திலிருக்கிறேன், இந்த நாட்டுக்கு மீண்டும் வர எனக்கு விருப்பமே இல்லை, இந்த நாடு தன் குடிமக்களை மோசமாக நடத்துகிறது என கொந்தளிக்கிறார்.
Maryயின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான Rachael Maskell, இரக்கத்தின் அடிப்படையில் Maryயை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க கோரி சுகாதாரச் செயலர் Matt Hancockகும், பிரதமர் அலுவலகத்திற்கும் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலில்லை!

