இலங்கையில் சிறுபான்மையாகும் பூர்வீக தமிழர்கள்? வெளியான அதிர்ச்சி புள்ளி விபரம்
இலங்கையில் வாழும் பூர்வீக தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சிறுபான்மையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பூர்வீக தமிழர்கள்
தமிழ்நாட்டைப் போலவே ஆதிகாலம் முதல் இலங்கையில் பூர்வக்குடிகளாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகம்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையாவதாக அதிர்ச்சி அளித்துள்ளது.
திருகோணமலை மற்றும் அம்பாறை
திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 1981ஆம் ஆண்டில் சிங்களர் 74 சதவீதமும், இலங்கை தமிழர் 12.6 சதவீதமும் இருந்துள்ளனர். ஆனால் 2012ஆம் ஆண்டில் சிங்களர் எண்ணிக்கை 74.9 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கை தமிழர் எண்ணிக்கை 11.2 சதவீதமாக குறைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 1981யில் 24.9 சதவீதமாக இருந்த சிங்களர் எண்ணிக்கையானது, 2012யில் 23.1 ஆக இருந்தது. இலங்கை தமிழரின் எண்ணிக்கையோ 42.1 சதவீதத்தில் (1981) இருந்து 39.8 சதவீதமாக (2012) குறைந்துள்ளது.
சிறுபான்மையினராகும் தமிழர்கள்
மேலும், திருகோணமலையில் சிங்களர் எண்ணிக்கை 33.6யில் இருந்து 27 சதவீதமாக குறைந்த நிலையில், தமிழர் எண்ணிக்கை 36.4யில் இருந்து 32.3 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோல் அம்பாறையில் 37.8 ஆக இருந்த சிங்களர் எண்ணிக்கை 38.7 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தமிழர் எண்ணிக்கை 20.4சதவீதத்தில் இருந்து 17.4 சதவீதமாக குறைந்துள்ளது.
இனப்பிரச்சனையால் உயிர், உடைமைகளை இழந்த தமிழர்கள் தங்கள் பூர்வீக பகுதிகளிலும் சிறுபான்மையினர் எனும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.