பரபரப்பான லண்டன் தெரு ஒன்றில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் திடீரென நுழைந்த பொலிசார்: ஹெலிகொப்டரும் வட்டமிட்டதால் அதிர்ச்சி
*பரபரப்பான லண்டன் சாலை ஒன்றில் திடீரென இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பொலிசார் நுழைந்தார்கள்.
*வானில் பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்றும் வட்டமிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
தெற்கு லண்டனிலுள்ள நோர்வுட் சாலையில் நேற்று மதியம் 2.00 மணியளவில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் பொலிசார் நுழைந்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன், அப்பகுதியில் பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்றும் வானில் வட்டமிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றிற்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், அங்கிருந்தவர்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர்.
Image: @HibaYAhmad
பின்னர், அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், மூன்று முதல் நான்கு இளைஞர்களைக் கைது செய்ததாக கூறப்படுகிறது.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட அந்த இளைஞர்கள் சுவர்ப்புறமாக திரும்பி நிற்பதையும், அப்பகுதிக்கு வரும் மக்களை பொலிசார் தடுத்து நிறுத்துவதையும், வானில் ஹெலிகொப்டர் ஒன்று வட்டமிடுவதையும் காணலாம்.
அவர்கள் யார், எதற்காக இந்த திடீர் கைது நடவடிக்கை என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரத்துக்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
( West Norwood )*
— London & UK Street News (@CrimeLdn) August 14, 2022