மேகனுடைய கடந்த கால உறவுகள் குறித்த அதிரவைக்கும் விடயங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும்: சூனியக்கார பெண் தகவல்
பிரித்தானிய ராஜ குடும்பம் தொடர்பான பல விடயங்களை வெளியிட்டுள்ள சூனியக்காரப் பெண் ஒருவர், ஹரியின் மகன் ஆர்ச்சியின் பிறப்பு மற்றும் ஹரியின் மனைவி மேகனுடைய கடந்தகால உறவுகள் குறித்த பல அதிரவைக்கும் தகவல்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
Northumberland சூனியக்காரி
தன்னை Northumberland சூனியக்காரி என்று அழைத்துக்கொள்ளும் ஜூலி என்னும் ஒரு குறி சொல்லும் பெண், ஹரி மேகனுடைய நெட்ப்ளிக்ஸ் தொடர் ராஜ குடும்பத்தில் உருவாக்கியுள்ள பிரச்சினைகள் எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.
Image: Facebook/northumberlandwitch
இது ராஜ குடும்பத்துக்கு சுவாரஸ்யமான ஒரு காலகட்டம் என்று கூறியுள்ள அவர், அவர்களுடைய அதிர்ஷ்டங்கள் மாறியுள்ளன, மகாராணியார் காலமாகிவிட்டார், நமக்கு புது மன்னர் கிடைத்துள்ளார், மகாராணியார் இல்லாத முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடப்போகிறோம், ஆனால், ராஜ குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்கிறார்.
மேகனுடைய கடந்த கால உறவுகள் குறித்த அதிரவைக்கும் விடயங்கள் வெளியாகும்
ஹரி மேகன் குடும்பம் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ள ஜூலி, ஹரியின் மகன் ஆர்ச்சியின் பிறப்பு மற்றும் ஹரியின் மனைவி மேகனுடைய கடந்தகால உறவுகள் குறித்த பல அதிரவைக்கும் தகவல்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Youtube/Northumberland Witch Tarot
Image: Netflix