ஒழுங்காக கொடுத்து விடுங்கள்! லண்டன் இரயிலில் இரவு நேரத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்... புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டனில் இரயிலுக்குள் இருந்த இரண்டு பயணிகளை தொடர்ந்து தாக்கிய நபர்கள் குறித்த முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
செண்ட்ரல் லைன் டுயூப் இரயிலில் தான் இந்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது.
அங்கிருந்த இரயிலுக்குள் மூன்று ஆண்கள் ஏறியுள்ளனர்.
உள்ளே உட்கார்ந்திருந்த இரண்டு பயணிகள் அருகில் சென்ற அவர்கள், எங்களிடம் கத்தி உள்ளது. ஒழுங்காக உங்களின் பைகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என மிரட்டினர்.
ஆனால் இருவரும் தர மறுத்த நிலையில் மூவரும் சேர்ந்து அவர்களை தொடர்ந்து தாக்கியும், குத்தியும் உள்ளனர்.
இது தொடர்பாக பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவத்தின் தொடர்புடையவர்களின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம்.
அவர்களிடம் விசாரணை நடத்தினால் எங்களுக்கு சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைக்கும்.
அவர்கள் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறுங்கள் என தெரிவித்துள்ளனர்.
