கனடாவில் கட்டாய தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நபர்கள்: பொலிசார் தெரிவித்துள்ள திடுக்கிட வைக்கும் தகவல்
கனடாவில், ட்ரக் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை எதிர்த்து ட்ரக் சாரதிகள் போராட்டத்தில் இறங்கினர்.
ஆங்காங்கு அவர்கள் ட்ரக்குகளுடன் குவிந்ததுடன், அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் பாலத்தையும் ஆக்கிரமிக்க, நீதிமன்ற தலையீட்டைத் தொடர்ந்து பொலிசார் பாலத்திலிருந்தவர்களை அகற்றி, வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சிலரிடம் ஏராளமான பெரிய பெரிய துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. அவைகளை பொலிசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், விசாரணை மேற்கொண்ட பொலிசார் திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அது என்னவென்றால், ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட ட்ரக் சாரதிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே அல்ல. அவர்கள் வெளியாட்கள், அவர்களும் ஆயுதங்களுடன் ட்ரக் சாரதிகள் கூட்டத்திற்குள் நுழைந்துள்ளார்கள் என்பதுதான் அந்த தகவல்.
இதற்கிடையில், Johnson Chichow Law (39) என்ற ஒருவரும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரைக் குறித்து அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் வேறு மாதிரி உள்ளன.
அதாவது Johnson இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையாம். அவர் மிகவும் நல்லவர் என்றும், தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் முழு நேரமும் கவனித்துக்கொள்பவர் என்றும், கடின உழைப்பாளி என்றும் கூறியுள்ள அந்த நண்பர், அவர் இப்படி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள விடயம் அறிந்து தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போராட்டக்காரர்களை பொலிசார் கையாண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பொலிஸ் துறைத் தலைவரான Peter Sloly தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் போராட்டக்காரர்களை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்காததால், பிரதமர் அவசர நிலை பிறப்பிக்கவேண்டிய நிலை உருவானதைத் தொடர்ந்து, Peter Sloly மீது விமர்சனங்கள் எழுந்ததால், அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.