மேலும் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல்... உலகத்தை ஆட்டிப்படைக்கும்! பிலவ வருட பஞ்சாங்கம் சொல்லும் அதிர்ச்சி தகவல்
பிலவ தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (14 ஏப்ரல் 2021) அன்று பிறந்தது. ஒவ்வொரு தமிழ் வருடம் தொடங்கும் போது அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வாசிப்பது பெரிய கோயில்களில் வழக்கமாக உள்ளது.
அந்த விதத்தில் சில முக்கிய கோயில்களில் வாசிக்கப்பட்ட பிலவ வருட பஞ்சாங்கத்தில் சில அதிர்ச்சியைத் தரக்கூடிய பலன்களும், சில நற்பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
புதியவகை வைரஸ்
பிலவ வருட பஞ்சாங்கத்தில் மகர லக்கினத்திற்கு 5ல் ராகு, 11ல் கேது இருப்பதாலும், செவ்வாய் சம்பந்தப்பட்டு இருப்பதாலும் புதிய வகை ரத்த புற்று நோய், புதிய வகை வைரஸ் நோய் தொற்று நோயாக பரவலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது உலகத்தை ஆட்டிப்படைக்கும் விஷயமாகவும், உலகம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்.
விபத்துக்கள் ஏற்படலாம்
பல நாடு தலைவர்கள், முக்கிய நபர்கள், விளையாட்டு வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து ஏற்படலாம்.
தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்
தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். பண கையிருப்பு மிக அதிகளவில் குறைந்து, ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை அதிகரிக்கும்.
பூச்சிகளால் பிரச்னைகள்
பூச்சிகளால் பயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் குறைந்தளவு மழை, மறு பகுதியில் நல்ல மழை பெய்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகும்.
ஆடி 5ம் தேதிக்கு பின் தேனீ, வண்டு உள்ளிட்ட பூச்சிகளால் கடுமையான பாதிப்பு ஏற்படலாம். பசு உள்ளிட்ட நான்கு கால் பிராணிகளுக்கு நோய் ஏற்படும். பால் உற்பத்தி குறையும்.
நோய் தாக்கம் குறையலாம்
ஜூனில் கொரோனா நோய் தாக்கம் முற்றிலும் அகலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.