புலம்பெயர் பணியாளர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தாலேயே பிரச்சினை: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்
கனடாவில், புலம்பெயர் பணியாளர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமே அவர்களுக்கு பிரச்சினையாக முடிந்துள்ளதாக ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
வேலையில் சேருவதற்காக சட்டவிரோதமாக பணம் வாங்குவது துஷ்பிரயோகம் அல்ல, ஏனென்றால் அந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர், தானாக முன்வந்துதான் அந்த தொகையைக் கொடுத்துள்ளார் என்று தனது அறிக்கையில் எழுதியுள்ளார் ஒரு புலம்பெயர்தல் அலுவலர்.
அதேபோல, மற்றொரு புலம்பெயர் பணியாளர் தனது பணிச்சூழல் குறித்து புகார் அளித்ததால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் துஷ்பிரயோகம் அல்ல என மற்றொரு புலம்பெயர்தல் அலுவலர் குறிப்பிட்டுள்ளார் என்பது போன்ற விடயங்கள் அந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளன.
ஆக, புலம்பெயர் பணியாளர்களுக்கு உதவுவதற்காக பெடரல் அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்திலுள்ள குறைபாடுகளே, அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது உதவி பெறுவதற்கு தடையாக அமைந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆய்வாளரும் ஆய்வறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவருமான பிரிட்டிஷ் கொலம்பியாவின் புலம்பெயர்தல் மையத்தில் சட்டத்தரணியாக இருக்கும் Amanda Aziz என்பவர் கூறும்போது, பாதிக்கப்பட்ட புலம்பெயர் பணியாளர் ஒருவர் புகாரளிக்கச் செல்லும் நிலையில், புலம்பெயர்தல் அலுவலர்கள், எது துஷ்பிரயோகம் என்பதற்கு கொடுத்துள்ள விளக்கங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
உதாரணமாக, இந்தியாவைச் சேர்ந்த Kishorkumar Ahir (46), வான்கூவரிலுள்ள ஒரு வீட்டிலுள்ள முதியவர் ஒருவரைக் கவனித்துக்கொள்வதற்காக, அதாவது செவிலியர் போன்ற ஒரு வேலைக்காக, புலம்பெயர்தல் கன்சல்டன்ட் ஒருவருக்கு 7,000 டொலர்கள் கொடுத்து ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
முதியவரைக் கவனித்துக்கொள்ளும் வேலைக்காக கனடா வந்த Kishorkumarஐ, பின்னர் டயர் கடை ஒன்றில் வேலை செய்யச் சொல்லியிருக்கிறார் அவருக்கு வேலை கொடுத்தவர்.
வேறு வழியில்லாமல் அந்த வேலையைச் செய்திருக்கிறார் Kishorkumar. பின்னர் அவர் open-work-permitக்காக விண்ணப்பிக்கும்போது, புலம்பெயர்தல் அலுவலரோ, Kishorkumar தானாக முன்வந்து தன் விருப்பத்தின் பேரில்தான் புலம்பெயர்தல் கன்சல்டன்ட்டுக்கு பணம் கொடுத்திருக்கிறார். அவர் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று கூறி, அவருக்கு பணி அனுமதி வழங்க மறுத்துள்ளார்.
அதை விட மோசமான விடயம் என்னெவென்றால், Kishorkumar டயர் கடையில் வேலை செய்த விடயம் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சிக்கு தெரிவிக்கப்பட, அவர்கள், Kishorkumar தன வந்த வேலையை விட்டுவிட்டு, விதிகளை மீறி வேறு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார்கள். அவர் முன்பே இந்த விடயம் குறித்து தங்களிடம் கூறாததால், கனடாவை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிழைக்கப் போன இடத்தில் அவர் பட்ட கொடுமையைக் கேட்டால் மனம் கொந்தளிக்கிறது.
2019ஆம் ஆண்டு, Open work permits for vulnerable workers என்னும் திட்டம் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. துஷ்பிரயோகம் செய்யப்படும் பணியாளர்கள், அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடுவதற்கு வசதியாக, open work permitக்கு விண்ணப்பிப்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், புலம்பெயர்தல் அலுவலர்களோ, ஒருவர் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி அந்த open work permitக்கு விண்ணப்பிக்கும்போது, துஷ்பிரயோகம் என்பதற்கான வரைமுறையில் அவர்களது புகார் வரவில்லை என்று கூறி சிலரது விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிலர் ஊதியம் கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளார்கள், சிலர் ஓவர்டைம் வேலை பார்த்ததற்கான ஊதியம் கொடுக்கப்படாமலும், சிலருக்கு வாக்களிக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டும் உள்ளது.
70 சதவிகிதம் பேர் மனோரீதியாகவும், திட்டு அடி என்று வாங்கியும், 30 சதவிகிதம் பேர் பாலியல் துஷ்பிரயோகமும், சிலர் கட்டாய பாலுறவுக்கு உட்படுத்தப்படுதல், நிர்வாணப் புகைப்படங்கள் அனுப்ப வற்புறுத்தப்படுதல் என தங்களுக்குப் பணி வழங்குவோரால் பல வித துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆனால், புகாரளிக்கும்போது, சில புலம்பெயர்தல் அலுவலர்கள், விண்ணப்பதாரர் கொடுத்துள்ள துஷ்பிரயோக குற்றச்சாட்டு, தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரைமுறைப்படி துஷ்பிரயோகம் என கருதப்படவில்லை என்று கூறி விண்ணப்பங்களை நிராகரித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆக, புலம்பெயர் பணியாளர்களுக்கு உதவுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த Open work permits for vulnerable workers திட்டமே, அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதற்கும், பாதிக்கப்படுவதை வெளியே சொன்னால் வேலை போய்விடுமோ என அஞ்சுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவரும், ஆய்வறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவருமான பிரிட்டிஷ் கொலம்பியாவின் புலம்பெயர்தல் மையத்தில் சட்டத்தரணியாக இருக்கும் Amanda Aziz.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022