வாகன சோதனையில் சிக்கிய காருக்குள் முகமூடிகள்: விசாரணையில் வெளியான அதிரவைக்கும் உண்மை...
பிரித்தானியாவில், வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் கார் ஒன்று சிக்கியது. அதிலிருந்த பொருட்கள் அதிரவைக்கும் உண்மை ஒன்றை வெளிக்கொண்டுவந்தன.
நகைக்கடையில் கொள்ளையடித்த முதியவர்கள்
இங்கிலாந்திலுள்ள Epping என்ற இடத்தில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றிற்குள் இரண்டு முதியவர்கள் நுழைந்தார்கள். திடீரென கத்தியைக் காட்டி கடைக்காரர்களில் ஒருவரைக் கட்டிப்போட்டு ஒரு விலையுயர்ந்த கைகடிகாரத்தைத் திருடிக்கொண்டார் ஒருவர்.
அடுத்து திருடுவதற்குள் அலாரம் ஒலிக்கவே, இருவரும் அங்கிருந்து கார் ஒன்றில் தப்பியோடினார்கள்.
Credit: East News
வாகன சோதனையில் சிக்கிய கார்
சில வாரங்களுக்குப் பின், Canvey Island என்ற இடத்தில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார்கள். அப்போது, சந்தேகத்துக்கிடமான கார் ஒன்றை அவர்கள் சோதனை செய்தபோது, அதற்குள் வயதானவர்களின் முகம் போல காட்சியளிக்கும் இரண்டு மாஸ்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மாஸ்குகள் சமீபத்தில் Eppingஇல் கொள்ளையடித்த முதியவர்களின் முகங்களுடன் ஒத்துப்போகவே, அப்போதுதான், அந்தக் காரில் பயணித்த, லண்டனைச் சேர்ந்த, George Murphy-Bristow (28) என்பவரும், அவரது சகோதரரான Ben Murphy (37) என்பவருமாக, இந்த முதியவர்கள் போல தோற்றமளிக்கும் மாஸ்குகளை அணிந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
Credit: East News
அந்த மாஸ்குகளை டி என் ஏ சோதனைக்குட்படுத்தியபோது, அதிலிருந்த எச்சிலை வைத்து, அதை அணிந்து கொள்ளையடித்தது இந்த சகோதரர்கள்தான் என்பது உறுதியானது.
ஆகவே, Ben Murphyக்கு 18 ஆண்டுகளும், அவரது தம்பியான George Murphyக்கு 13 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Credit: BPM
Credit: East News