16 வயது சிறுமியை கத்தியால் குத்தி..வீதியில் இழுத்துச் சென்ற 47 வயது கொடூரன்..வெளியான அதிர்ச்சி வீடியோ
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தப்பட்டு, வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான வீடியோ
சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ ஒன்றை பலர் குறிப்பிட்டு, அதில் இருக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை வலியுறுத்தினர்.
அந்த வீடியோவில் நபர் ஒருவர் சிறுமியின் தலை முடியை பிடித்து தரதரவென சாலையில் இழுத்துச் செல்கிறார். அவரது கையில் கத்தி ஒன்று உள்ள நிலையில், அந்த சிறுமியின் பயத்தில் அலறுகிறார்.
இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இதுதொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த நபரின் பெயர் ஓம்கார் திவாரி (47) என்பதும், சிறுமியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
ये वीडियो छत्तीसगढ़ की बताई जा रही है। महिला को बुरी तरह घायल कर बाल पकड़कर सड़क पर खींच रहा है ये राक्षस। इतने लोग ये सब होता देख रहे हैं लेकिन कोई आगे बढ़कर मदद नहीं कर रहा। कहाँ है प्रशासन ?? pic.twitter.com/L5AfGaGXgQ
— Swati Maliwal (@SwatiJaiHind) February 19, 2023
மேலும் சிறுமியின் கழுத்தில் கத்தியால் குத்திய ஓம்கார், தப்பி ஓட முயன்றதால் அவரை தர தரவென இழுத்துச் சென்றுள்ளார்.
கைது செய்த பொலிஸார்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் உடனடியாக ஓம்கார் திவாரியை கைது செய்தனர். ராய்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் கூறுகையில், 'ராய்பூரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் ஓம்கார் திவரிடம் குறித்த சிறுமி வேலை பார்த்துள்ளார். அவரை திருமண செய்ய வேண்டும் என்று ஓம்கார் கூறியதை மறுத்த சிறுமி வேலையை விட்டுள்ளார்' என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த ஓம்கார், அவரது குடும்பத்தினரை கடுமையாக பேசியுள்ளார் என்றும், தற்போது சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.