இனி UK, US, EU காலணி அளவுகள் வேண்டாம்! வரப்போகிறது இந்தியாவுக்கான Bha
இந்தியாவில் UK மற்றும் US நாடுகளின் காலணி அளவைக் கொண்டு செருப்புகள் தயார் செய்து வந்த நிலையில் Bha என்ற தனி காலணி அளவு உருவாக்கப்பட உள்ளது.
இந்தியர்களின் காலனி அளவுகள்
இந்தியர்களுக்கு என்று காலணி அமைப்போ அல்லது அளவோ இல்லாமல் இருந்ததால் UK, EU மற்றும் US நாடுகளின் காலணி அளவு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த அளவை கொண்டு தான் இந்தியாவில் ஷூக்கள் மற்றும் செருப்புகள் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல ஜப்பான் நாட்டிலும் தனி காலணி அளவு இருக்கிறது.
இதற்காக இந்தியா முழுவதும் உள்ள 79 இடங்களில் மத்திய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research ) மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Leather Research Institute) சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வானது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக விருத்தி துறையிடம் (DPIIT) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கணக்கெடுப்பு 1,01,880 பேரிடம் நடத்தப்பட்டது.
அதில் சராசரி இந்தியப் பெண்ணின் கால் அளவு 11 வயதிலும், ஆண்களுக்கு 15 அல்லது 16 வயதிலும் உச்சத்தை அடைகிறது என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்களின் கால்களைவிட இந்தியர்களின் கால்கள் அகலமானதாக இருப்பதால், அந்நாடுகளின் அளவுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை அணியும் போது பாதம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
தனி காலணி அளவு 'Bha'
இந்நிலையில் இந்தியர்களுக்கான 'Bha' என்ற தனி காலணி அளவு உருவாக்கப்பட உள்ளது. இதற்கு 'பாரத்' என்று சுருக்கமாக சொல்லப்படுகிறது.
இந்த 'Bha' அளவு காலணிகள் 5 மில்லி மீட்டர் நீளம் மற்றும் கூடுதல் அகலத்துடன் இருப்பதால் இந்தியர்களுக்கு நல்ல சௌகர்யத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த BHA Bha' அளவு காலணிகள் எட்டு காலணி அளவுகளை முன்மொழிகிறது
I - குழந்தைகளுக்கு (0 முதல் 1 வயது)
II - குழந்தைகளுக்கு (1 முதல் 3 ஆண்டுகள்)
III - சிறு குழந்தைகளுக்கு (4 முதல் 6 ஆண்டுகள்)
IV - குழந்தைகளுக்கு (7 முதல் 11 வயது வரை)
V - சிறுமிகளுக்கு (12 முதல் 13 வயது)
VI - ஆண்களுக்கு (12 முதல் 14 வயது)
VII - பெண்களுக்கு (14 வயது மற்றும் அதற்கு மேல்)
VIII - ஆண்களுக்கு (15 வயது மற்றும் அதற்கு மேல்)
இது கிட்டத்தட்ட 85% இந்தியர்களுக்கு சரியான பொருத்தத்தை உறுதி செய்யும். மேலும், இந்த புழக்கமானது 2025 -ம் ஆண்டில் முழுமையாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |