சச்சின் டெண்டுல்கர் ஒரு லட்சம் ரன்கள் கூட அடித்திருப்பார்! ஐசிசியை சாடிய ஷோயிப் அக்தர்
ஐசிசியின் தற்போதைய விதிமுறைகள் அப்போதே இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் ஒரு லட்சம் ரன்களை எடுத்திருப்பார் என பாகிஸ்தான் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்த பேட்டியில் ஐசிசியை சாடியுள்ளார். அவர் கூறுகையில், இப்போது 3 ரிவியூக்களை அனுமதிக்கிறார்கள். சச்சின் காலத்தில் 3 ரிவியூக்கள் வைத்திருந்தால் அவர் 1 லட்சம் ரன்களை எடுத்திருப்பார்.
டெண்டுல்கர் ஒரு கடினமான துடுப்பாட்ட வீரர். அவர் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சகாப்தத்தில் ஆடினார். அவருக்காக நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்.
இதற்கு காரணம், அவர் ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோருக்கு எதிராக விளையாடினார். ஷேன் வார்னுக்கு எதிராக விளையாடினார். பிரெட் லீயை எதிர்கொண்டார்.
ஏன் நான் வீசியுள்ள வேகப்பந்துகளை கூட லாவகமாக பவுண்டரிக்கு தட்டிவிட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதனால் தான் நான் கூறுகிறேன் உலகில் மிகவும் சிறந்த மற்றும் கடினமான வீரர் சச்சின் தான் என கூறியுள்ளார்.