பாரிஸ் புறநகர் பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சூடு: சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்
Shooting at outside Paris suspect arrested: பாரிஸ் புறநகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாரிஸ் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தென்மேற்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் சிறுமி உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
ஈவ்லைன்(Yvelines) மாகாணத்தில் உள்ள ட்ராப்ஸ் மற்றும் லா வெரியர் ஆகிய இரண்டு நகரங்களை இணைக்கும் 3 முக்கிய இடங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ராணுவத்தில் பயன்படுத்தும் அதிநவீன தானியங்கி துப்பாக்கிகளை தாக்குதல்தாரிகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உள்துறை அமைச்சர் லோரான் நூனெஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தெளிவான தீவிரவாதக் குற்றம் என்றும் அமைச்சர் லோரான் நூனெஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ விவரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. அதே நேரத்தில் இந்த தாக்குதல் இனவெறி தூண்டுதலால் நடந்து இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.