கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூடுகள் - பின்னணியில் இருப்பது இந்தியா?
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள், ஒரு சட்டத்தரணி போன்ற தோற்றத்துடனும் சட்டத்தரணியின் அடையாள அட்டையுடன் ஓர் நபர் நுழைந்துள்ளார்.
சட்டத்தரணி போல் பாவணை செய்துக்கொண்டு வருகின்ற ஓர் பெண், கொலையாளியிடம் சட்டத்தரணி பயன்படுத்தும் புத்தகத்தை வழங்கியுள்ளார்.
குறித்த சட்டப்புத்தகத்தின் உள்ளே அதன் பக்கங்கள் கட்சிதமாக நீக்கப்பட்டு, அதன் நடுவே ஓர் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகள் நடந்துக்கொண்டிருந்த போது, விசாரணை கூண்டில் நின்றுக்கொண்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ என்கிற பாதாள உலக குழு ஒன்றின் தலைவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சாதாரணமாக மக்களுடன் மக்களாக அவர் நீதிமன்றத்தில் இருந்து சென்றுவிட்டார்.
இந்த படுகொலையை இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் உள்ள முரண்டுபாடுகள் என்ற கோணத்தில் தான் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது வேறு கோணத்தில் நடைபெற்று வருகிறது.
அது குறித்து விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
வீடியோ,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |