தேவாலயத்தில் புகுந்து இராணுவ வீரர் ஒருவரின் வெறிச்செயல்: பின்னர் நடந்த கொடூர சம்பவம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தேவலயம் ஒன்றில் புகுந்து துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதுடன், அந்த தேவாலயத்திற்கும் நெருப்பு வைத்துள்ளார்.
எட்டு பேர் மருத்துவமனையில்
குறித்த சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
தொடக்கத்தில் வெளியான தகவலில், துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்த பல மணி நேரத்திற்குப் பிறகு, தீக்கிரையாக்கப்பட்ட தேவாலயத்தில் குறைந்தது இரண்டு உடல்களைக் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனால் இறப்பு எண்ணிக்கை 4 என அறிவிக்கப்பட்டது. பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், 40 வயதான முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மோர்மன் தேவாலயத்தில் நுழைந்து, திடீரென்று துப்பாக்கியால் சுட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர் தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட் என்ற முன்னாள் கடற்படை வீரர் என்பதும் அடையாளம் காணப்பட்டது.
2004 முதல் 2008 வரை ஈராக்கில் அவர் பணியாற்றியுள்ளதும் உறுதி செய்யப்பட்டது. காயமடைந்த 8 பேர்களில் ஒருவர் மட்டும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
324வது துப்பாக்கிச் சூடு
மேலும், துப்பாக்கிச் சூட்டை அடுத்து அந்த நபர் தேவாலயத்தை தீக்கிரையாக்கியதால், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தரவுகளொஇன் அடிப்படையில், 2025ல் இதுவரை அமெரிக்காவில் பதிவாகியுள்ள 324வது துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றே தெரிய வருகிறது. இதனிடையே, வட கரோலினாவில், ஈராக்கில் பணியாற்றிய 40 வயது கடற்படை வீரர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
மிச்சிகன் சம்பவத்திற்கு 14 மணி நேரத்திற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய Nigel Max Edge என்பவர் மீது மூன்று முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |