கனடாவில் இந்திய பிரபலம் ஒருவரின் குடியிருப்பு மீது துப்பாக்கிச் சூடு
பிரபல பஞ்சாபி பாடகர் பிரேம் தில்லானின் குடியிருப்பு மீது கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
திங்கட்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் ஜெய்பால் புல்லர் குழு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் குழு வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பகவான்பூரியா என்பவர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இசைத்துறையில் பஞ்சாப் பாடகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Boot Cut, Old Skool மற்றும் Majha Block உள்ளிட்ட பாடல்களால் கவனம் ஈர்த்தவர் தில்லான். கடந்த செப்டம்பர் மாதமும் வான்கூவரில் விக்டோரியா தீவில் உள்ள பஞ்சாபி பாடகர் ஏபி தில்லானின் குடியிருப்பிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றச்செயல் குழுக்கள்
இந்த சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழுவைச் சேர்ந்த ரோஹித் கோதாரா என்பவர் பொறுப்பேற்றார். 2023 நவம்பர் மாதம் கனடாவில் பாடகர் ஜிப்பி கிரேவால் வீட்டில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார்.
குறித்த சம்பவம் வான்கூவரில் உள்ள வைட் ராக் பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. மட்டுமின்றி, பாடகர் சித்து மூஸ்வாலாவின் படுகொலையும் கனடா குற்றச்செயல் குழுக்கள் தொடர்புடையது என்றே விசாரணையில் அம்பலமானது.
மட்டுமின்றி, பஞ்சாபில் அவருக்கான பொலிஸ் பாதுகாப்பை அரசாங்கம் திரும்பப் பெற்றதன் பின்னரே, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், அதில் அவர் கொல்லப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |