ஒரே நாளில் 10 முறை... பிரித்தானியாவில் கடை உரிமையாளர் ஒருவரின் பகீர் அனுபவம்
பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவர் தமது கடையில் போலி வாடிக்கையாளர்களால் ஏற்படும் நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில்
க்ராய்டன், சர்ரே பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வருகிறார் பென் செல்வரத்தினம். இவரே தமது துணிச்சல் மிகுந்த ஊழியர்களுடன் இணைந்து திருட்டில் ஈடுபடும் வாடிக்கையாளர்களை எதிர்கொண்டதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
Credit: Darren Fletcher
சர்ரே பகுதியில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கடைக்குள் புகுந்து வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில் திருட்டில் ஈடுபடும் சம்பவம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
ஆனால் 2022ல் தேசிய அளவில் சராசரியாக 23 சதவீதம் இதுபோன்ற திருட்டு சம்பவம் நடந்துள்ளதாகவே கூறப்படுகிறது. தமது கடையில் பதிவான கமெரா காட்சிகளை வெளியிட்டு, இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் பென் கோரிக்கை வைத்துள்ளார்.
39 வயதான பென் செல்வரத்தினம் தெரிவிக்கையில், என்னைப் போன்ற கடின உழைப்பாளிகளான கடை உரிமையாளர்கள் இந்த திருட்டு தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிசாரும் அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை
தமது 8 ஆண்டு அனுபவத்தில், இதுபோன்ற திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவர் கூட நீதியின் முன் நிறுத்தப்பட்டதில்லை எனவும் தமது ஆதங்கத்தை பென் வெளிப்படுத்தியுள்ளார்.
Credit: Darren Fletcher
நிலைமை தற்போது கைவிட்டு சென்றுவிட்டது என குறிப்பிடும் பென் செல்வரத்தினம், போலி வாடிக்கையாளர்களின் திருட்டு சம்பவங்களை பொலிசாரும் அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் 10 சம்பவங்கள் வரையில் தமது கடைக்குள் இதுபோன்ற போலி வாடிக்கையாளர்களால் நடந்துள்ளதாக பென் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, திங்கள் முதல் ஞாயிறு வரையில் தமது கடைக்குள் நடந்த திருட்டு சம்பவங்களை அவர் புகைப்படங்கலுடன் பட்டியலிட்டுள்ளார்.
பொலிசார் தெரிவிக்கையில், திருட்டு சம்பவங்கலுடன் குற்றச்செயலும் நடந்தால் மட்டுமே பொலிசார் தலையிட முடியும் என விளக்கமளித்துள்ளனர். மேலும், கடைகளில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் ஒவ்வொன்றையும் பொலிசாரால் கண்காணிக்கவும் முடியாத சூழல் உள்ள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |