இன்னும் சில வாரங்களில் பிரித்தானியாவில் முக்கிய உணவுப்பொருள் ஒன்றிற்குத் தட்டுப்பாடு
அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளை ஈடு செய்யும் அளவில் வர்த்தகர்கள் விலையை உயர்த்தாத பட்சத்தில், பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் முட்டைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம் என விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாலன்றி, முட்டை தட்டுப்பாட்டைத் தவிர்க்கமுடியாது என பிரித்தானிய முட்டை உற்பத்தியாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தொழில் திவாலாகும் நிலைக்கு ஆளாகியுள்ளதால், சுமார் 10 முதல் 15 சதவிகித விவசாயிகள் முட்டை உற்பத்தித்தொழிலையே விட்டுவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் போர் காரணமாக கோழித்தீவனத்தின் விலை அதிகரித்துள்ளதால், உற்பத்தி செய்யும் ஒவ்வொரு முட்டைக்கும் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.